சங்கீதம் 134 (TCV)

சங்கீதம் 134
சீயோன் மலை ஏறும்போது பாடும் பாடல்.
1யெகோவாவினுடைய ஆலயத்தில் இரவில் ஊழியம் செய்கின்ற யெகோவாவின் பணியாட்களே,
எல்லோரும் யெகோவாவைத் துதியுங்கள்.
2பரிசுத்த இடத்திலே உங்களுடைய கைகளை உயர்த்தி,
யெகோவாவைத் துதியுங்கள்.
3வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவா
சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக.